அமெரிக்காவின் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இந்தியப்படங்களுக்கு இடம் கிடைப்பது என்பதே இமாலய சாதனைதான். அதிலும் தமிழ் படத்திற்கு அது குதிரைக் கொம்புதான். இந்த நிலைகளை எல்லாம் உடைத்தெரிந்து, ஹாலிவுட் படங்களையும் மிஞ்சி அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்து தமிழ்த் திரையுலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது எந்திரன். (சூர்யாவின் சிங்கம், ரஜினியின் சிவாஜி போன்ற மிகச் சில படங்களே அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடும் படியான இடம் பிடித்துள்ளன என்பது கூடுதல் தகவல்.)
பிரமாண்டம் என்றால்... அனிமேட்ரானிக்ஸ் என்றால்... உலக அளவில் வசூல் சாதனை என்றால்... எல்லாவற்றிக்கும் ஹாலிவுட், ஹாலிவுட், ஹாலிவுட் படங்கள்தான். இந்த வழக்கத்தை எல்லாம் மாற்றியுள்ளது எந்திரன்...!
தமிழனால் எப்படிப்பட்ட கதையையும் எடுக்க முடியும் என உலக சினிமாவுலகிற்கு நிரூபித்துள்ளார் ஷங்கர். “ஒரு இந்தியனால் இப்படியும் எடுக்க முடியுமா...! ” என்ற ஆச்சர்யத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்திவிட்டது எந்திரன்.
தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும், எந்திரன் ஒரே நேரத்தில் உலகமெங்கும் திரையிடப்பட்டது. வெளியான இடமெல்லாம் அந்தந்த ஏரியாவிற்கு ஏற்ற சிறப்பான வரவேற்ப்பை பெற்றுவிட்டது எந்திரன்.
தமிழகத்தில்... பாலாபிஷேகம், தேர் இழுத்தல், மொட்டை இட்டு நேர்த்திகடன் செலுத்துதல், வேட்டு வெடித்தல் என்று ஏகபோக கொண்டாட்டம்தன்.
சிறுவர் முதல் முதியவர்வரை அனைவரையும் விசில் அடித்து ஆர்ப்பரிக்க செய்துவரும் எந்திரன், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் பிரமிப்பை ஏற்படுத்தி, அவரின் பாராட்டை பெற்று விட்டது. சென்னையில் சத்யம் திரையரங்கில் முதல்வருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இதில் முதல்வருடன், தயாளு அம்மாள், ரஜினிகாந்த், மு.க.அழகிரி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், செல்வி செல்வம் , காந்தி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பார்த்தனர்.
படம் முடிந்ததும் ரஜியை பாராட்டிய முதல்வர், "நடிப்பில் மிரட்டிட்டீங்க. எந்திரன் அனைவரையும் கவரும் மந்திரன்" என்றார்.
இப்படி அனைவரையும் வியக்கவைத்து வரும் எந்திரன் அமெரிக்காவையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
எந்திரன் வெளியாவதற்கு முதல் நாள் இரவு, அமெரிக்கா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். முதன் முறையாக இந்தச் சிறப்பையும் எந்திரன் பெற்றுள்ளது.
இந்தச் சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகையே, மற்ற தமிழ்ப் படங்களின் மொத்த காட்சிகளின் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியான அன்றே ( அக்டோபர் 1) எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான ‘சோஷியல் நெட்வொர்க்’ முதலிடத்திலும் இருந்தன. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிக்கப்பட்டது.
அதேபோல், இரண்டாம் நாள் (அக்டோபர் 2ந் தேதி)எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்து சாதனை படைத்துவிட்டது.
எந்திரனின் இன்னொரு சாதனை யூகே வில் தொடரவிருக்கிறது...
இங்கிலாந்து டாப் 10 வரிசையில் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருந்த போதும், முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன் நகர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் ‘சிவாஜி’ இங்கிலாந்து டாப் 10 வரிசையில் 9 வது இடம் பிடித்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் சிவாஜி பெற்றது. இப்போது எந்திரன் யூ.கே டாப் 10 வரிசையில் டாப்பான இடத்தை பிடித்து கலக்கவுள்ளது.
"திரையிட்ட நாள்- திருவிழா நாள் ரசிகர்களுக்கு. அடுத்த நாள்- சாதனை நாள் தமிழ்த் திரையுலகிற்கு. இனிவரும் நாட்கள்- மாஸ் வெற்றி நாட்கள் எந்திரனுக்கு."
கெட் ஃபோர்ஸ் ரெடி...
நன்றி... நக்கீரன்
Where did u get this information? I couldn't find endhiran US top 10 list. Can you please provide the source of your information?
ReplyDeleteDear Pugal,
ReplyDeleteI have got the info from nakkheeran.in
Please check this link http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=643