Friday, November 19, 2010

எந்திரன் தந்த எனர்ஜி... நெகிழ்கிறார் இயக்குனர் ஷங்கர்!

அக்.18,2010
'எந்திரன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டுகளும் தனக்குப் புத்துணர்வைத் தந்துள்ளது என நெகிழ்கிறார் இயக்குனர் ஷங்கர்!

படத்தைத் தொடங்கியதில் இருந்து இசை வெளியீடு வரை அவ்வப்போது தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாக பதிவு செய்து வந்த இயக்குனர் ஷங்கர், எந்திரன் ரியாக்ஷன்களைக் கோர்த்து நன்றி நவில்கிறார்.

"எந்திரன் படத்தை பார்த்து ரசித்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விமர்சனம் செய்து பாராட்டிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்கு, வடக்கையும் தாண்டி, உலக அளவில் 'பாக்ஸ்-ஆபிஸ்' சாதனையை நிகழ்த்தியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

எந்திரனைப் பார்த்த பிறகு, என்னை நேரடியாகவும் போன் மூலமும் தொடர்புகொண்டு இந்தியத் திரையுலகின் முக்கியக் கலைஞர்கள் பாராட்டினர்.

அமீர் கான் படத்தை பார்த்து விட்டு, என்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியதில் நெகிழ்ந்துபோனேன். நான், அமீர்கான், அவருடைய மனைவி கிரண் ராவ் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் எந்திரன் படத்தை பற்றி விடிய விடிய பேசினோம்.

எந்திரனை ரசித்துவிட்டு தனது பரவசத்தைப் பகிர்ந்துகொண்டார், ஹிர்த்திக் ரோஷன். பூச்செண்டுடன் அழகான வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி அசத்தினார், நடிகர் கமல்ஹாசன்.

கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குனர்கள், நடிகர்கள் பலரும் தங்களது பாராட்டைப் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் பாலச்சந்தரிடம் இருந்து வந்த வாழ்த்துச் செய்தியைக் கண்டு வியந்துவிட்டேன். திரையுலகில் 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும் அவரே எனக்கு ரோல் மாடல். அவரைப் போல் 15 ஆண்டுகளேனும் இயக்குனராக நிலைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

அவரது வாழ்த்துக் கடிதத்தைப் படித்தபோது, உணர்வெழுச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டேன். கடித்ததை முழுவதும் படித்து முடித்த அந்தத் தருணத்தில், எனது கண்ணீரை அடக்க முடியவில்லை. எனது தொழிலில் பணிவுடனுடம், கூடுதல் எனர்ஜியுடனும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது," என்று நெகிழ்ந்திருக்கிறார் ஷங்கர்.

எந்திரன் படத்தை 'இந்தியாவின் அவதார்' என இயக்குனர் பாலச்சந்தர் தனது வாழ்த்துக் கடிதத்தில் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி - கா.இசக்கிமுத்து (ஜூனியர் விகடன்)

Friday, November 12, 2010

கவிழ்ந்த விமர்சகர்கள், வியந்த நடுநிலையாளர்கள், கலங்கிய ரசிகர்கள்!!

Monday, November 8, 2010 at 1:54 pm | 2,790 views
சும்மா வந்துவிடவில்லை எந்திரன் வெற்றி!

டந்த அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து எந்திரன் பெரும் வெற்றி பெற்ற செய்தி வெளியாக வெளியாக, அது குறித்த விமர்சனங்களும் குறைவின்றி குவிந்து கொண்டே இருந்தன.
இந்த வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை மற்றும் இணைய தளங்களிலும் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்த்து, ரசிகர்கள் அல்லாத, நடுநிலையாளர்களே கூட, ‘இது டூ டூ மச்’ கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் படத்தை ஷங்கர் பிரமாதமாய் செதுக்கியிருந்தாலும், சன் பிக்சர்ஸ் சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்திருந்தாலும், இந்த பிரமாண்ட வெற்றியின் மூலகர்த்தா, சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்பது ஷங்கர் – சன் இருவருக்குமே நன்கு தெரியும்!

அந்த மூலகர்த்தா, எந்திரனுக்காக பட்ட பாடுகள், ‘மேக்கிங் ஆஃப் எந்திரன்’ என்ற பெயரில் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பான போது விமர்சகர்கள் தலை கவிழ்ந்தன, நடு நிலையாளர்கள் வியந்தனர், ரசிகர்களோ கண் கலங்கினர்!
நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த என் தாயார் இப்படிச் சொன்னார்: “இந்த மனுசனுக்கு என்ன குறை… இப்படியெல்லாம் கஷ்டப்பட வேணாம்னு சொல்லுப்பா…!”
ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, தமிழ்க் குடும்பங்களில் ஒரு Household name ஆகவே ரஜினி மாறிப்போயிருப்பதன் பிரதிபலிப்பு இது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அத்தனை ரசிகர்களுமே அன்று அந்தத் தாயின் மனநிலையில்தான் தவித்திருப்பார்கள்!
ரஜினி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த மட்டுமல்ல.. தன்னையே திருப்திப்படுத்திக் கொள்ள இந்த அளவு இறங்கி வந்து, இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டாரோ, என்று கேட்க வைத்தது அவர் மேற்கொண்ட முயற்சிகள். சும்மா வரும் வெற்றி நிலைக்காது என்பார் தலைவர் அடிக்கடி. அப்படிச் சொன்னது பிறருக்கு மட்டுமல்ல, தனக்கும் சேர்த்தே என்பதைப் புரியவைத்துவிட்டார்.
அவர் இருக்கும் நிலைக்கு, ‘இதையெல்லாம் செய்ய முடியாது. டூப் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு சின்ன தலையசைப்பிலேயே உணர்த்திவிட்டுப் போயிருக்க முடியும்.
ஆனால், எதிலும் ஒரு ஒரிஜினாலிட்டி வேண்டும், கஷ்டப்பட்டு பெறும் வெற்றிதான் நிலைக்கும், இனிக்கும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதத்தில், ரஜினி உழைத்த உழைப்பு, அனைவருக்கும் ஒரு பாடம்! இந்த உண்மையான மனிதருக்கு, உத்தம கலைஞனுக்கு ரசிகனாக இருப்பதை எண்ணி நிஜமாகவே ஒவ்வொருவரும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள்!
உண்மை மகத்தானது… அசாதாரண வலிமை வாய்ந்தது. பொய்யர்களையும் புனை சுருட்டுக்காரர்களையும் ரொம்ப சாதாரணமாக ஊமையாக்கிவிடும் சக்திமிக்கது!
நண்பர்கள் பலர் ஒரு யு ட்யூப் லிங்க்கை அனுப்பி, இதில் ரஜினி போல மாஸ்க் அணிந்துள்ள ஸ்டன்ட் கலைஞர் யார்? என்ன?வென்று பலமுறை நம்மிடம் கேட்டிருந்தனர். இயக்குநர் ஷங்கரிடமே அதற்கான பதிலைப் பெற்று பதிவு செய்திருந்தோம். இதோ, இப்போது மேக்கிங் ஆஃப் எந்திரன் மூலம், அந்த ரயில் சண்டைக் காட்சியில் எந்த அளவு ரிஸ்க் எடுத்திருக்கிறார் ரஜினி என்பதை உணர்த்தியிருக்கிறார் ஷங்கர். யாரோ ஒருவர் கொடுத்த வீடியோ லிங்கை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதியவர்கள், இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ!
நிஜமாவே ஓடும் ரயில், சரளைக் கற்களுக்கு மத்தியில் நிஜமான தண்டவாளம், சக்கரம் பொருத்தப்பட்ட கால்களுடன் ஓடும் நிஜ ரஜினி.. ஒரு நிமிடம் முதுகுத்தண்டு சிலிர்த்தது. அந்த ஹை வோல்டேஜ் மின்சாராக் கம்பிகளுக்கு மத்தியில், சாதாரண ஸ்டன்ட் கலைஞர்களுக்கு சமமமாய் தானும் ரயில் மீது நின்று சண்டை போட்ட காட்சியும், அந்த பதட்ட நிமிடங்களை தலைவர் விவரித்த விதமும்… சட்டென்று கண்கள் கலங்கி விட்டன. என்னதான் பாதுகாப்புடன் படமாக்கப்பட்டாலும், எந்த இளம் ஹீரோவுக்காவது இந்த தில் இருக்குமா…?
இன்னொரு விஷயத்தையும் இங்கே ஒப்புக் கொள்ள வேண்டும்… முன்பெல்லாம், ‘அவர் இப்படி மேக்கப் போட்டார்… இவர் இப்படி ரிஸ்க் எடுத்தார்,’ என்று செய்திகள் வரும். அப்போது  ‘ரஜினியைப் பற்றியும் இப்படி செய்தி வர வேண்டும்’ என்று ஒரு சின்ன ஆசை நிறையப் பேருக்கு இருந்தது உண்மைதான்.
ஆனால் இந்த மேக்கிங் ஆப் எந்திரன் பார்த்த பிறகு, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இந்த எண்ணம்தான் நிச்சயம் தோன்றியிருக்கும்: ‘தலைவா… போதும். ரசிகர்களைத் திருப்திப்படுத்த நீங்கள் எடுத்த ரிஸ்க் எல்லாம் போதும். நீங்கள் சொன்னதுபோல, எழுதறவங்க எழுதிக்கிட்டுதான் இருப்பாங்க. உங்களுக்கு ரிவார்ட் தர ரசிகர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து இந்த ரிஸ்க் இனியும் வேண்டாம்!’
தலைவரை ஆறுமணிநேரம் ஒரு டப்பில் படுக்க வைத்த காட்சியிலும் சரி, அவரைப் போல மாஸ்க் செய்ய அவரை உட்கார வைத்து தலையில் அந்த கெமிக்கல் குழம்பை ஊற்றும்போதும் சரி, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, முகத்தோல் உரிந்தது போன்ற கெட்டப்பில் தலைவரை தரையில் துடிக்க வைத்த காட்சியிலும் சரி…மனம் தவித்தது (விகடன் குழுவினருக்கு ஒரு நான்கு முறையாவது இந்த மேக்கிங் ஆஃப் எந்திரனை போட்டுக் காட்ட வேண்டும்!).
இவ்வளவு அரும்பாடுபட்டும், எந்த பெருமைக்கும் சொந்தம் கொண்டாடவில்லை ரஜினி. ‘ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர், ஐஸ்வர்யா அருமை, கலாநிதி மாறன் பிளானிங் பக்கா, பீட்டர் ஹெயின் சிறப்பா பண்ணார்…,’ இப்படித்தான் வார்த்தைக்கு வார்த்தை ரஜினி சொன்னாரே தவிர, அந்தப் புகழில் தன் பங்கைப் பற்றி துளி கூட அலட்டிக் கொள்ளவில்லை. பெருமையிலும் பெருமை என்றாரே வள்ளுவர்… அந்தப் பெருமைக்கு உதாரணம் ரஜினி என்றால் மிகையல்ல!!
இறுதியில் அந்த ஹாலிவுட் கலைஞர்கள், ஜாக்கி சானின் ஸ்டன்ட் மாஸ்டர் போன்றோர் ரஜினிக்கு சூட்டிய புகழாரம்: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிறவிக் கலைஞர். அவரால் எதையும் செய்ய முடியும். இந்த மாதிரி ஒத்துழைப்பு தந்த நடிகரைப் பார்த்ததே இல்லை. அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது..!” – சிலிர்ப்பாக இருந்தது.
‘நான் செய்யும் எந்த விஷயமும் தமிழருக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும்’ என்று, செய்துவிட்டுத்தான் சொல்லியிருக்கிறார் ரஜினி!
-வினோ

எந்திரன்… எவ்வளவுதான் வசூலாச்சு? – ஒரு விரிவான ரிப்போர்ட்

Monday, October 11, 2010 at 5:15 am | 7,793 views
எந்திரன்… எவ்வளவுதான் வசூல்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் ரிலீஸான தினத்திலிருந்து இன்று வரை, நாட்டின் பிரதான நாளேடுகள், இணையதளங்களில், படத்தின் உலகளாவிய வசூல் குறித்து தொடர்ச்சியாக செய்திக் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், சிஃபி, ஒன் இந்தியா, இந்தியா டுடே, ரீடிஃப், என்டிடிவி, அவ்வளவு ஏன் பிபிசி, தி இன்டிபெண்டன்ட் போன்ற வெளிநாட்டு மீடியாக்களும் கூட தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்திகளை தொடர்ந்து வெளியிடுகின்றன. வேறு எந்தப் படத்துக்காவது, இந்த அளவு பாக்ஸ் ஆபீஸ் நிலவரச் செய்திகள் வந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
இதுவரை வெளியான எல்லாச் செய்திகளும் சொல்லும் சாரம் ஒன்றுதான்.
அது: “இந்திய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது எந்திரன்” என்பதே. உண்மைதான். இதில் மிகை எதுவுமில்லை.
இந்தியில் ‘ஆல்டைம் பிளாக்பஸ்டர்’ என்று சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தின் முதல் வார வசூலை விட கிட்டத்தட்ட இருமடங்கு வசூலித்துள்ளது எந்திரன் / ரோபோ. முதல்வார முடிவில் விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையாக மட்டும் எந்திரன் ரூ 42 கோடியைக் குவித்துள்ளது. சல்மான்கானின் தபாங் ரூ 30 கோடியையும், அமீர்கானின் 3 இடியட்ஸ் 21.5 கோடியையும் மட்டுமே தந்துள்ளன.
எந்திரன் தந்துள்ள விநியோகஸ்தர் பங்கில் ரூ 25 கோடி தமிழ்ப் பதிப்பு மூலம் கிடைத்தது (விநியோகஸ்தர்கள் பங்கு என்பது, தியேட்டர் வாடகை, கேளிக்கை வரிகள் போக விநியோகஸ்தர்களுக்குக் கிடைக்கும் தொகை. தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லாவிட்டாலும், பிற மாநிலங்களில் 35 முதல் 60 சதவீதம் வரை அதிக அளவு கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது) குறிப்பிடத்தக்கது.
டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், சிஃபி, ஒன் இந்தியா, இந்தியா டுடே, ரீடிஃப், என்டிடிவி, அவ்வளவு ஏன் பிபிசி, தி இன்டிபெண்டன்ட் போன்ற வெளிநாட்டு மீடியாக்களும் கூட தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்திகளை தொடர்ந்து வெளியிடுகின்றன. வேறு எந்தப் படத்துக்காவது, இந்த அளவு பாக்ஸ் ஆபீஸ் நிலவரச் செய்திகள் வந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
இதுவரை வெளியான எல்லாச் செய்திகளும் சொல்லும் சாரம் ஒன்றுதான்.
அது: “இந்திய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது எந்திரன்” என்பதே. உண்மைதான். இதில் மிகை எதுவுமில்லை.
இந்தியில் ‘ஆல்டைம் பிளாக்பஸ்டர்’ என்று சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தின் முதல் வார வசூலை விட கிட்டத்தட்ட இருமடங்கு வசூலித்துள்ளது எந்திரன் / ரோபோ. முதல்வார முடிவில் விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையாக மட்டும் எந்திரன் ரூ 42 கோடியைக் குவித்துள்ளது. சல்மான்கானின் தபாங் ரூ 30 கோடியையும், அமீர்கானின் 3 இடியட்ஸ் 21.5 கோடியையும் மட்டுமே தந்துள்ளன.
எந்திரன் தந்துள்ள விநியோகஸ்தர் பங்கில் ரூ 25 கோடி தமிழ்ப் பதிப்பு மூலம் கிடைத்தது (விநியோகஸ்தர்கள் பங்கு என்பது, தியேட்டர் வாடகை, கேளிக்கை வரிகள் போக விநியோகஸ்தர்களுக்குக் கிடைக்கும் தொகை. தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லாவிட்டாலும், பிற மாநிலங்களில் 35 முதல் 60 சதவீதம் வரை அதிக அளவு கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது) குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் விற்பனை மூலம்…
டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வசூல் என்று பார்த்தால், முதல் 7 நாட்களில் எந்திரன் ரூ 117 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கணக்கேடுகளில் காட்டப்படும் தொகைதான். உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் இருக்கும் என்கிறார்கள் நமக்கு நெருங்கிய விநியோகஸ்தர்கள்.
சரி, இந்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தாலும் டிக்கெட் விற்பனை வசூலிலும் எந்திரன் / ரோபோவே முதலிடம் பெறுகிறது. இந்த வகையில் தபாங்க் ரூ 82 கோடியையும், 3 இடியட்ஸ் ரூ 100 கோடியையும் வசூலித்ததாகக் குறிப்பிடுகிறார் மும்பை விநியோகஸ்தர் கோமல். அதிலும் இந்த இரு இந்திப் படங்களும் இரு வாரங்களில் வசூலித்த தொகை இது. ஆனால் ரஜினியின் எந்திரன் / ரோபோ ஒரே வாரத்தில் இதைவிட பல கோடி அதிகம் ஈட்டியுள்ளது.
இப்போதைக்கு ஒட்டுமொத்த வசூலில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது அமீர்கானின் 3 இடியட்ஸ்தான். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான இந்தப் படம் மொத்தம் ரூ 260 கோடி வரை ஈட்டியிருந்தது. மூன்றாவது வார வசூல் நிலவரம் வெளியாகும் போது, 3 இடியட்ஸின் சாதனையை எந்திரன் எளிதில் தாண்டிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
ஒரு மகாராஜாவைப் போல…
இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸில் ஒரு மகாராஜாவைப் போல கம்பீரமாக வீற்றிருக்கிறது எந்திரன் என்பதை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்.
பிரபல விநியோகஸ்தர் போரா கூறுகையில், “அமீர்கானின் 3 இடியட்ஸ், சல்மான் கானின் தபாங் இரு படங்களின் வசூலையுமே ரஜினியின் எந்திரன் / ரோபோ எளிதாக தாண்டிவிடும்”, என்றார்.
இந்தியில் மட்டுமே ரோபோ ரூ 30 கோடியை (gross) வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டப்பிங் படமான எந்திரனின் சாதனை மலைக்க வைப்பதாக கூறுகிறார் மற்றொரு விநியோகஸ்தர் சுனில் வாத்வா. மீரட், காஸ்யாபாத், ஜோத்பூர், குஜராத் நகரங்களில் இந்த இரண்டாவது வாரமும் திருப்தியான வசூலுடன் ரோபோ ஓடுவதாக வாத்வா கூறுகிறார்.
ஆந்திரத்தில் தொடரும் சாதனை!
ஆந்திர சினிமா இதுவரை பார்த்திராத வசூல் சாதனையை எந்திரன் நிகழ்த்தி வருகிறது என்றால் அது மிகவும் சம்பிரதாயமான வார்த்தையாகிவிடும். அந்த அளவு மிகுந்த வரவேற்புடன் ஓடுகிறது ரோபோவும் எந்திரனும்!
ஹைதராபாத் நகரில் மட்டும் 40 திரையரங்குளில் சராசரியாக 93 சதவிகித பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் ரோபோ, முதல்வார முடிவில், தெலுங்கில் பெரிய ஹிட்டான ராம்சரண் தேஜாவின் மகாதீரா வசூலை ‘ஜஸ்ட் லைக்தட்’ முந்தியுள்ளது. தெலுங்கில் இதுவரை ரூ 20 கோடிவரை குவித்துள்ள ரோபோவுக்கு, புதன் கிழமை வரை மல்டிப்ளெக்ஸ்களில் டிக்கெட் இல்லை என்பதே ஆந்திரா தரும் இன்ப அதிர்ச்சி.
கேரளாவில் ரூ 4 கோடி!
உண்மையிலேயே பெரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது கேரள திரையுலகம். காரணம் இந்த ஆண்டு முழுவதும் அங்கே காட்டப்பட்டது நஷ்டக் கணக்குதான். ஓரிரு படங்கள் தப்பிப் பிழைத்தன. இந்த நிலையிலிருந்து மலையாளம் சினிமாவைக் காக்கவே வேறு மொழிப் படங்களை இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் பண்ண வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கட்டுப்பாடு வி்தித்தனர்.
ஆனால் இந்தத் தடை இப்போது இல்லை. அக்டோபர் 1-ம் தேதி 128 திரையரங்குகளில் வெளியான எந்திரன், கடந்த 7 நாட்களில் மட்டும் ரூ 4.32 கோடியை வசூலித்துள்ளது. மலையாளத்தின் பெரிய நடிகர்கள் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஓபனிங் வசூல் இது. இன்னும் அதிக பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன்.
பெரும் நஷ்டத்தில் தவித்த மலையாள சினிமாவுக்கு நிம்மதியைத் தந்துள்ளது எந்திரன் வசூல் என்கிறார்கள்.
“கேரள சினிமாவில் இதுவரை அதிகபட்ச ஆரம்ப வார வசூல் என்றால் மோகன்லால் நடித்த ஷிகார் படத்துக்குதான் கிடைத்தது. அதுவும் ரூ 91 லட்சம். ஆனால் ரஜினியின் எந்திரன் ரூ 4 கோடியைக் குவித்துவிட்டது. இந்த சாதனையை அடுத்த பல ஆண்டுகளுக்கு வேறு எந்த மலையாளப் படமும் ஹீரோவும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது”, என்கிறார் கேரள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சாபு செரியன்.
பெங்களூரில் எந்திரனில் பெரும் வசூல் பார்த்த தியேட்டர்காரர்களை, மாநில வணிக வரித்துறையினர் ரெய்ட் அடித்திருக்கிறார்கள் என்றால், அங்கு எந்த அளவு அதிக வருவாய் கிடைத்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்!
வெளிநாடுகளில் எந்திரன் / ரோபோ 350 அரங்குகளில் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 136 அரங்குகளில் வெளியான இந்தப் படம், மூன்றே நாளில் கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்களை ஈட்டியிருந்தது. இந்த வார முடிவில் அது 5 மில்லியன் டாலர்களாக உயரும் என்கிறார்கள். மலேசியாவில் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலானது. இன்னும் பல நாடுகளின் எந்திரன் வசூல் விவரங்கள் இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்!
-வினோ

Monday, November 1, 2010

ரஜினிக்கு சம்பளம் கொடுத்துவிட்டார்களா?


"எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்த பிறகு, படம் முடியும் வரையில் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி... அதை இன்றுவரை காப்பாற்றுகிறார்" என்று படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலாநிதி மாறன் குறிப்பிட்டிருந்தார்.

படம் வெளியாகிவிட்டது. பெரும் வெற்றி... அள்ள அள்ள கோடிகளில் குவிகிறது வசூல். எனில் ரஜினிக்கு சம்பளம் கொடுத்துவிட்டார்களா?

ஆம்.... ரஜினிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதை ரஜினி வாங்கிய விதம், அவர் எத்தனை புத்திசாலி என்பதை நிரூபிக்கிறது. நேற்று முளைத்த காளான் நடிகர் கூட பிளாக்ல எவ்வளவு என்று கீழ்க்குரலில் சம்பளம் பேசும் இன்றைய சூழலில் இவர் முழு சம்பளத்தில் வெள்ளையாகவே தாருங்கள் என்று கூறிப் பெற்றுள்ளார்.

வழக்கமாக குறிப்பிட்ட ஏரியாவை சம்பளத்தோடு ரஜினிக்குத் தருவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் எந்திரனுக்கு அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்ட ரஜினி, முழு சம்பளத்துக்கும் வருமான வரியைச் செலுத்தி டிடிஎஸ் சான்றிதழோடு காசோலை கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.

ரஜினியின் விருப்பப்படியே முழு சம்பளத்துக்கும் வரி செலுத்தி, டிடிஎஸ் சான்றிதழ் மற்றும் காசோலையை ரஜினியிடம் கலாநிதி மாறன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ரஜினி தனது முழு சம்பளத்துக்கும் தொடர்ந்து முறையாக வரி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதாவது நோ ப்ளாக். 15 ஆண்டுகளுக்கும் மேல், வருமான வரித்துறையிடமிருந்து "பக்காவாக வரி செலுத்துபவர்" என்ற நற்சான்றும் பெற்று வருகிறார்.

இதற்கு முன்பு சிவாஜியில் நடித்ததற்கான சம்பளமும், இதே முறையில், வரி செலுத்தப்பட்ட பிறகே அவருக்குத் தரப்பட்டது நினைவிருக்கலாம்.

பாஸ் ஆல்வேஸ் மிஸ்டர் க்ளீன்தான்!