Tuesday, October 5, 2010

பாலிவுட்டில் ரோபோ கொண்டாட்டம்...!

 
லகமெங்கும் ரஜினி ரசிகர்களை குஷிப் படுத்திவரும் எந்திரன், பாலிவுட் திரையுலகத்தையும் பரவசப்படுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற எந்திரன் இந்திப் பதிப்பான ரோபோவின் பிரிமியர் ஷோவிற்கு பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்திருந்தனர்.  ரஜினிகாந்த், ஷங்கர் இதில் கலந்துகொண்டனர் .

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,  அபிசேக் பச்சன்,  ஐஸ்வர்யாராய் பச்சன் ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். தேவ் ஆனந்த்,  தர்மேந்திரா,  அமீர்கான், ஹேமமாலினி,  தபு, ஊர்மிளா, ஸ்ரேயா, சன்னி தியோல்,  ரமேஷ் சிப்பி, கிரண்கெர், இயக்குனர் சுபாஷ் கய், ராஜ்குமார், பிரேம் சந்தோஷி, கரண் ஜோஹர், பிரேம் சோப்ரா உட்பட பாலிவுட் திரையுலகமே ஆவலுடன் வந்திருந்தது ரோபோ திரைவிழாவிற்கு.

இதை ‘ரோபோ பாலிவுட் மாநாடு’ என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பாலிவுட் நட்சத்திரக் கூட்டம் மொத்தமும் இங்கே ஜொலித்தது. 
  
இந்த ரோபோ பிரிமியர் ஷோவிற்கு சௌந்தர்யா ரஜினி காந்த்தும் வந்திருந்தார். இவருக்கு திருமண வாழ்த்துகள் தெரிவித்தனர் பாலிவுட் பிரபலங்கள்.  ரோபோவின் விசாரிப்பை விட சௌந்தர்யாவின் திருமண விசாரிப்புதான் விஷேசமாக இருந்தது எனலாம்.    
 
பாலிவுட்டின் அத்தனை பிரபலங்களையும் ஒன்று திரட்டி மும்பையை கலக்கியுள்ள எந்திரன் பற்றி அமிதாப் “ரஜினி என்னும் அற்புதக் கலைஞருக்காகவும், இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாக உருவாகியிருக்கும் ரோபோ படத்திற்காகவும் பாலிவுட் திரையுலகமே இங்கு வந்திருக்கிறது. ரஜினி,ஷங்கர் இருவரின் கடின உழைப்பு ரோபோவில் தெரிகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.” என்றார்.
  
இயக்குனர் சுபாஷ் கய், “ ரஜினிக்கு இணை ரஜினிதான். மிரட்டி விட்டார் ரோபோ,” என குறிப்பிட்டார்.

“இந்திய சினிமாவின் பெருமை ரஜினி. ஹாலிவுட்டுக்கு இணையாக ரோபோ அமைந்துள்ளது’’ என ரோபோவின் பிரமாண்டம் பற்றி குறிப்பிட்டார் தேவ் ஆனந்த். 

ஹேமமாலினி, “ ரஜினி நல்ல மனிதர். எனது சிறந்த நண்பரும்கூட. தமிழில் கமல், ரஜினி இருவரின் படங்களை விரும்பி பார்பேன்.  ரோபோவில் ரஜினி சூப்பர்.  அவரோட ஸ்டைலும், நடிப்பும் பார்க்கும் போது பிரமிப்பா இருந்தது” என்றார்.   

இந்தியன் படத்தில் ‘அக்கடான்னு உடை போட்டு’ கலக்கிய ஊர்மிளா, “ இந்தியன் படத்தின்போது ஷங்கரின் திறமை, உழைப்பை நேரில்  பார்த்திருக்கிறேன்.  ரோபோ படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார் ஷங்கர். ரஜினியின் ஸ்டைலில்  அசந்துபோயிட்டேன். ரஜினி ரியலி சூப்பர் ஸ்டார்” என்றார்.     

ஸ்ரேயா, “ரஜினி சார், ஷங்கர் சார் டீமில் ‘சிவாஜி’யில் நடிச்சேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். சிவாஜி படத்தின்போது ரஜினி சாரின் எளிமை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கு. அதே போல் ரோபோவின் பிரமாண்டமும்,  இதில் ரஜினி சாரின் நடிப்பும் என்னை ஆச்சர்யப்படுத்திருக்கு” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம் அமீர்கான், ஷங்கர் சந்திப்பு. அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தை ஷங்கர் தமிழில் ரீமேக் செய்யப்போவதாக அனைத்து மீடியாக்களும் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல் ஷங்கர், அமீர்கான் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். 3 இடியட்ஸ் குறித்த பேச்சுக்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம். 

இதே போல் எந்திரன் ஏற்கனவே தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் பிரமிப்பை ஏற்படுத்தி, அவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சத்தியம் திரையரங்கில் முதல்வருக்காக காட்டப்பட்ட சிறப்புக் காட்சியை பார்த்தபின் "நடிப்பில் மிரட்டிட்டீங்க. எந்திரன் அனைவரையும் கவரும் மந்திரன்" என ரஜினியை வாழ்த்தினார் முதல்வர்.

இப்படி அனைவரின் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் எந்திரனின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன.
 
நன்றி....நக்கீரன்

Sunday, October 3, 2010

உலகமெங்கும் எந்திரன் திரைவிழா...




ஷங்கரின் 10 ஆண்டுகால கனவு, 3 ஆண்டுகால உழைப்பு, அத்துடன் உலக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று எல்லாவற்றிக்கும் பலனாக இன்றுமுதல் எந்திரன் திரைவிழா கொண்டாடுகிறது.  


எந்திரன் பல ஆச்சரியங்களை நிகழ்த்தி உள்ளது.  சில ஆச்சரியங்கள் தானாகவே எந்திரனுக்கு அமைந்துள்ளன. எந்திரன் திரையிடப்பட்டுள்ள இன்றைய தேதியான 01.10.10 என்பதே எந்திரனோடு தொடர்பானதே.  011010 என்னும் குறியீட்டு மொழியில்தான் கணிப்பொறித் தகவல்கள் பதிவாகும். அந்த வகையில் எந்திரனோடு சம்பந்தப்பட்டுள்ளது இந்த ரிலீஸ்தேதி.

எந்திரன் படக்குழுவினர் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி மகுடமாக இன்று வெளியாகியுள்ளது எந்திரன். உலக அளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், கோவை என தமிழகமெங்கும் திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கொண்டாட்டம், தீபாவளிக் கொண்டாட்டமாக எந்திரனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.  

திரையரங்குகள் எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பாலாபிஷேகம் மழையாகப் பொழிகிறது. தவுசன்வாலா வெடிசத்தம் சும்மா வானையே அதிரவைக்கிறது. இந்த அமர்க்களம் இங்குமட்டுமல்ல...  சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா, சீனா, ஜப்பான், துபாய் என உலகமெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடிவருகிறார்கள்.

இப்படி ரசிகர்கள் கொண்டாடிவரும் எந்திரனை விளையாட்டு வீரர்களும் கொண்டாடவிருக்கிறார்கள்.  காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை திருப்தி படுத்தவிருக்கிறது எந்திரன். 

காமன் வெல்த் விளையாட்டு கிராமத்தில், போட்டிக்காக வந்திருக்கும் வீரர், வீராங்கனைகள் கண்டு மகிழ ஒரு திரையரங்கம் உருவாகப்பட்டுள்ளது.   இதில் ரோபோ (எந்திரன் இந்திப் பதிப்பு) ,  அஞ்சானா அஞ்சானி உள்ளிட்ட பல புதுப்படங்களை திரையிடத் திட்டமிட்டுள்ளனர். 

இப்படி இத்தனை சிறப்பு மிக்க எந்திரனுக்கே ஹைலைட்டானது கடைசி 40 நிமிட விறுவிறுப்பான காட்சிகள்தான்.  இந்த சந்தோஷமான நேரத்தில் அந்த அனிமேட்ரானிக்ஸ் காட்சிகள் உருவான விதத்தை ஷங்கர் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா...

இதோ அவரின் எந்திர வார்த்தைகள்...


“எந்திரனின் ஒவ்வொரு காட்சியையும் எந்த படத்தின் சாயலும் வந்திடக் கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு திரைக்கதை அமைத்திருக்கோம். அதனால் படத்தில் எல்லாமே பிரெஷ்ஷா இருக்கும். 

எந்திரனின் அனிமேட்ரானிக்ஸுகாக ‘ஸ்டான்வின்ஸ்டன்’ என்கிற ஹாலிவுட் ஸ்டூடியோவுக்கு போனோம். நாங்க ஏற்கனவே படத்தை ரஃபா ரெடி பண்ணி வச்சிருந்தோம். அதை அங்க திரையிட்டு, இதுதான் கதை, இதுக்கு ரோபோ பண்ணணும் என சொன்னதுமே, அங்க இருந்த எல்லாருமே “வாவ்... எக்ஸலன்ட். ரொம்ப புது ஐடியாவா இருக்கு” என்று எங்கள் கையை பிடிச்சு குலுக்கினாங்க.  

ஒரு ரோபோ பண்ண வேண்டும் என்றால் இங்கேயே அனிமேஷனில் பண்ணலாம். ஆனா, அது அனிமேஷன்னு ரசிகனுக்கு தெரிந்து விடும். 

அதனால, அனிமேட்ரானிக்ஸில் ரஜினி மாதிரியே மெட்டலில் ஒரு உருவத்தை உருவாக்கி, அதை இயங்க வச்சோம். இந்த இயக்கத்துக்குதான் அனிமேட்ரானிக்ஸ் தேவைப்பட்டது. ரசிகனின் நம்பகத் தன்மைக்காக, அதிக செலவு பண்ணி அதை பண்ணியிருக்கோம். 

அதுமட்டுமில்லாமல் வேற சில டெக்னிக்குகளையும் இதற்காக பயன்படுத்தியிருக்கோம். ரோபோ ரஜினி பண்ற விஷயங்கள் எல்லாமே அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். 

இந்தப் படத்துக்காக ரஜினியின் உழைப்பு அபாரமானது. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப ஆர்வமாக கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்.

எவ்வளவு நேரமானாலும் ஸ்பாட்டுலயே இருப்பார். அவரோட எளிமையை பத்திதான் எல்லாரும் பேசுவாங்க. ஆனா, அவரோட உழைப்பை எந்திரனில் பார்த்து அசந்திருக்கேன். 


இதில் வரும் ஒரு ரயில் சண்டை காட்சியில் ரஜினி அதிக ரிஸ்க் எடுத்து சண்டை போட்டிருக்கார். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு இந்தச் சண்டைக் காட்சியில் பலமுறை விபத்து ஏற்பட்டது. ஒரு கட்டத்துல அவர் பிழைப்பதே கஷ்டங்கற நிலைமை. ஆனால், மீண்டு வந்து அடுத்தடுத்த சண்டைக்காட்சிகளை அமைத்தார்.  

இதில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி த்ரில்லிங்கா, இப்படியெல்லாம் பண்ண முடியுமா என்கிற மாதிரியான சண்டைக்காட்சி அது. அதற்காக பட்டபாடு கொஞ்சமல்ல. 

உலகத்திலேயே முதன்முறையா வித்தியாசமான அனிமேஷன் பண்ணியிருக்கோம். ‘குங்குஃபூ ஹஸில்’, ‘கிடாரோ’ உட்பட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் பண்ணியிருக்கிற பிராங்கி சங்க்தான் எந்திரனுக்கும் பண்ணியிருக்கார். 

அவராலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த அனிமேஷனை முடிக்க முடியவில்லை.  ‘இது எனக்கே சவாலான விஷயமா இருக்கு. இதுக்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுது. பக்காவா பண்ணுவோம், வெயிட் பண்ணுங்க’ என்றார் பிராங்கி. அப்படி கஷ்டப்பட்டு, கவனமாக உருவாக்கிய கிளைமாக்ஸ் நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார் எந்திரனுக்கு உயிரூட்டிய ஷங்கர்.

அவர் சொன்னதைப் போலவே நம்மை பிரமிக்க வைக்கிறது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி... 


நன்றி....நக்கீரன்

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ‘டாப் 1’ மிரட்டும் எந்திரன்...

 
மெரிக்காவின் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இந்தியப்படங்களுக்கு இடம் கிடைப்பது என்பதே இமாலய சாதனைதான்.  அதிலும் தமிழ் படத்திற்கு அது குதிரைக் கொம்புதான். இந்த நிலைகளை எல்லாம் உடைத்தெரிந்து,  ஹாலிவுட் படங்களையும் மிஞ்சி அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்து தமிழ்த் திரையுலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது எந்திரன். (சூர்யாவின் சிங்கம், ரஜினியின் சிவாஜி போன்ற மிகச் சில படங்களே அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடும் படியான இடம் பிடித்துள்ளன என்பது கூடுதல் தகவல்.)

பிரமாண்டம் என்றால்... அனிமேட்ரானிக்ஸ் என்றால்...  உலக அளவில் வசூல் சாதனை என்றால்... எல்லாவற்றிக்கும் ஹாலிவுட், ஹாலிவுட்,  ஹாலிவுட் படங்கள்தான். இந்த வழக்கத்தை எல்லாம் மாற்றியுள்ளது எந்திரன்...! 

தமிழனால் எப்படிப்பட்ட கதையையும் எடுக்க முடியும் என உலக சினிமாவுலகிற்கு நிரூபித்துள்ளார் ஷங்கர்.  “ஒரு இந்தியனால் இப்படியும் எடுக்க முடியுமா...! ”  என்ற ஆச்சர்யத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்திவிட்டது எந்திரன்.

தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும், எந்திரன் ஒரே நேரத்தில் உலகமெங்கும் திரையிடப்பட்டது. வெளியான இடமெல்லாம் அந்தந்த ஏரியாவிற்கு ஏற்ற சிறப்பான வரவேற்ப்பை பெற்றுவிட்டது எந்திரன். 

தமிழகத்தில்... பாலாபிஷேகம், தேர் இழுத்தல், மொட்டை இட்டு நேர்த்திகடன் செலுத்துதல், வேட்டு வெடித்தல் என்று ஏகபோக கொண்டாட்டம்தன்.

சிறுவர் முதல் முதியவர்வரை அனைவரையும் விசில் அடித்து ஆர்ப்பரிக்க செய்துவரும் எந்திரன்,  தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் பிரமிப்பை ஏற்படுத்தி, அவரின் பாராட்டை பெற்று விட்டது. சென்னையில் சத்யம் திரையரங்கில் முதல்வருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இதில் முதல்வருடன்,  தயாளு அம்மாள், ரஜினிகாந்த், மு.க.அழகிரி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், செல்வி செல்வம் , காந்தி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பார்த்தனர். 

படம் முடிந்ததும் ரஜியை பாராட்டிய முதல்வர், "நடிப்பில் மிரட்டிட்டீங்க. எந்திரன் அனைவரையும் கவரும் மந்திரன்" என்றார்.



இப்படி அனைவரையும் வியக்கவைத்து வரும் எந்திரன் அமெரிக்காவையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
 
எந்திரன் வெளியாவதற்கு முதல் நாள் இரவு, அமெரிக்கா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். முதன் முறையாக இந்தச் சிறப்பையும் எந்திரன் பெற்றுள்ளது.

இந்தச் சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகையே, மற்ற தமிழ்ப் படங்களின் மொத்த காட்சிகளின் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

படம் வெளியான அன்றே ( அக்டோபர் 1) எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான ‘சோஷியல் நெட்வொர்க்’ முதலிடத்திலும் இருந்தன. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிக்கப்பட்டது. 

அதேபோல், இரண்டாம் நாள் (அக்டோபர் 2ந் தேதி)எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்து சாதனை படைத்துவிட்டது.


எந்திரனின் இன்னொரு சாதனை யூகே வில் தொடரவிருக்கிறது...

இங்கிலாந்து டாப் 10 வரிசையில் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருந்த போதும்,  முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன் நகர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் ‘சிவாஜி’ இங்கிலாந்து டாப் 10 வரிசையில் 9 வது இடம் பிடித்தது.  இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் சிவாஜி பெற்றது.  இப்போது எந்திரன் யூ.கே டாப் 10  வரிசையில் டாப்பான இடத்தை பிடித்து கலக்கவுள்ளது. 

"திரையிட்ட நாள்- திருவிழா நாள் ரசிகர்களுக்கு.  அடுத்த நாள்- சாதனை நாள் தமிழ்த் திரையுலகிற்கு. இனிவரும் நாட்கள்- மாஸ் வெற்றி நாட்கள் எந்திரனுக்கு."

கெட் ஃபோர்ஸ் ரெடி...  
 
நன்றி... நக்கீரன்

எந்திரன் ஸ்பெஷல் 25

அக்டோபர் 1-ல் வெள்ளித்திரைக்கு வந்த, 'எந்திரன்'. இந்தியிலும் தெலுங்கிலும் 'ரோபோ'வாக தூள் பரத்திக் கொண்டிருக்கிறது.

எண்ணிக்கையில் ரஜினியின் 154-வது படம், ஷங்கரின் இயக்கத்தில் 10-வது படம், ஐஸ்வர்யா ராயின் 5-வது தமிழ் படம். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் முதல் படம்.
 
'இந்தியன்' பட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து 'ரோபோ' என்ற பெயரில் படம் எடுக்க ஆரம்பித்தார் ஷங்கர். சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர், 'ரோபோ'வை ஷாருக்கான் நடித்து தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. 2007ம் ஆண்டு ஷாருக்கானும் ஷங்கரும் தாங்கள் இப்படத்தை கை விட்டுவிட்டதாக அறிவித்தனர். தனக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்பது ஷாருக்கானின் எண்ணம்.

ரஜினி - ஷங்கர் இணைந்த 'சிவாஜி' படத்தின் வெற்றியை அடுத்து, தனது 'ரோபோ'வில் ரஜினி நடிக்கிறார் என்று 2008-ம் ஆண்டு அறிவித்தார் ஷங்கர். 'ரோபோ' கதை ரஜினிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இப்போது எந்திரனாக வருகிறது.
எந்திரனை முதலில் ஐங்கரன், EROS நிறுவனங்கள் கூட்டாக தயாரித்தன. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, EROS அப்போது வாங்கி விநியோகம் செய்த படங்களும், ஐங்கரன் தயாரித்த படங்களும் தொடர் தோல்வியடைய, எந்திரன் படத் தயாரிப்பில் சிக்கல் வந்தது. பின்னர், இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து எந்திரன் படத்தை வாங்கி, தானே தயாரித்தது சன் பிக்சர்ஸ்.

எந்திரன் படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் ரூ.6 கோடி. படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர், Danny Denzongpa.

ரஜினி நடித்த சந்திரமுகி, சிவாஜி படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் வலம் வந்தவர்கள் வடிவேலு மற்றும் விவேக். ஆனால், எந்திரனில் ரஜினியுடன் காமெடி செய்திருப்பதோ சந்தானம் மற்றும் கருணாஸ்.
Men in Black Series படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றிய Mary E. Vogt, எந்திரனில் மனிஷ் மல்கோத்ராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். Mary E. Vogt பணியாற்றிய முதல் இந்திய திரைப்படம் இதுவே!

உலக அளவில் சூப்பர் ஹிட் படங்களான The Matrix, Crouching Tiger and Hidden Dragon ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகள் வடிவமைத்த Yuen Woo Ping இப்படத்துக்கு பீட்டர் ஹெய்னுடன் இணைந்து சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார்.

Avatar, Star Wars, Titanic ஆகிய படங்களுக்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த Industrial Light & Magic நிறுவனம் தான் இப்படத்தில் பணியாற்றியுள்ளது. இந்த நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பிரிவில் இதுவரை 15 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Aliens, Terminator 2 மற்றும் Jurassic Park ஆகிய படங்களுக்கு Animatronics செய்த Stan Winston Studios இப்படத்தில் பணியாற்றியுள்ளது.

ரஜினியின் மேக்கப்புக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.3 கோடி. சிகை அலங்காரத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் தமிழில் ஒரு படமே தயாரிக்கலாம்!

எந்திரன் படத்தில் நடித்ததற்காக ரஜினி இதுவரை சம்பளம் வாங்கவே இல்லை. ரீலிஸ் ஆகும் தினத்தில் சம்பளம் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

எந்திரன் படத்தில் வரும் 'கிளிமாஞ்சாரோ..' எனும் பாடலை மிச்சு பிச்சு என்ற இடத்தில் படமாக்கி இருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படமான 'Quantum of Solace' படத்துக்கு கூட அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு நடந்த முதல் சினிமா ஷுட்டிங் 'எந்திரன்' தான்!

எந்திரன் படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதியவர், எழுத்தாளர் சுஜாதா. 2008ம் ஆண்டு அவரது மறைவுக்கு பின், கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியலி கிரேட்!' என ஷங்கர் நெகிழ்ந்தார். இப்போது பட டைட்டிலில்... வசனம் - சுஜாதா, ஷங்கர், கார்க்கி.

சின்ன வயதில் சுஜாதாவை அனைவரும் 'ரங்குஸ்கி' என்றே அழைப்பார்காளாம். அந்தப் பெயரை எந்திரன் படத்தில் வரும் கொசு ஒன்றுக்கு சுஜாதா சூட்டி இருந்தார்

சிவாஜி படம் வெளியான சமயத்தில் ரஜினி மொட்டை பாஸ் கேரக்டரில் வருவதை ரசிகர்களுக்கு சஸ்பென்ஸாக வைத்து இருந்தார் ஷங்கர். அது பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினி ஆசைப்பட்டார் என்று எந்திரன் படத்திலும் கடைசி 45 நிமிடங்கள் ரஜினி வித்தியாசமான கேரக்டரில் வருவது போல் உருவாக்கி இருக்கிறார் ஷங்கர். அது என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ்.

எந்திரன் படத்தில் முக்கியமான காட்சிக்கு ஒன்றுக்கு இசை அமைப்பதற்கு 60 லட்ச ரூபாய் செலவு ஆகும் என்று கூறி இருக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். காட்சிக்கு தேவைப்பட்டால் கூட 70 லட்சம் கூட தருகிறேன் என்று கூறினாராம் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

எந்திரன் படத்தில் வரும் ஒரு காட்சிக்காக ஒரு அட்டைப் பெட்டிக்குள் சுமார் 7 மணி நேரம் கை, கால்கள் எதுவும் அசையாமல் உட்கார்ந்து சிரத்தையுடன் நடித்து கொடுத்திருக்கிறார், ரஜினி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் மிக அதிக பொருட்செலவில் உருவான படம் எந்திரன். இப்படத்தின் பட்ஜெட் ரூ.190 கோடி. இதில் 40% (ரூ.76 கோடி) கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் செலவிடப்பட்டுருக்கிறது.
தமிழில் ஆடியோ உரிமையை THINK இசை வெளியூட்டு நிறுவனம் ரூ.7 கோடி கொடுத்து வாங்கியது. இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் ஆடியோ உரிமையும் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆனது இல்லை.

எந்திரன் ஆடியோ வெளியான அடுத்த நாளே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐ.டியூன்ஸில் முதல் இடத்தை பிடித்தது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்தின் பாடல்களும் வெளியான அடுத்த நாளே ஐ.டியூன்ஸில் டாப் 10-ல் இடம் பிடித்தது இல்லை.

எந்திரன் பாடல்கள் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் ஒன்றரை கோடி சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்த் திரைப்பட சிடி விற்பனையில் இதுவரை இருந்த எல்லா சாதனைகளையும் 'எந்திரன்' ஆடியோ சிடி முறியடித்தது.

'ஸ்பைடர்மேன்' படத்தை அடுத்து உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகும் படமாக எந்திரன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் எந்திரன் படத்துக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த அரை மணி நேரத்தில் முதல் 10 நாட்களுக்கு முடிந்து விட்டது. படத்தின் ஒரு டிக்கெட் விலை $40. இதுவரை அமெரிக்காவில் எந்த ஒரு திரைப்படத்தின் டிக்கெட்டும் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆனது இல்லை. இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரஜினியின் சிவாஜி டிக்கெட் விலை $25.

"எந்திரன் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. எந்திரன் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை," என்று ரஜினி கூறியுள்ளார்.

நன்றி....விகடன்

Friday, October 1, 2010

எந்திரன் விமர்சனம்

டம் பார்த்த பிறகு மனதில் எழும் ஒரே கேள்வி, இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்குமா என்பது தான். ஆனால் இப்படி எல்லாம் நடந்தால் ப்படி இருக்கும் என்ற கற்பனையை கண் முன் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

 

பந்தா, பில்டப் எதுவும் இல்லாத சிம்பிளான ரஜினியை பார்க்க ரொம்பவே புதிதாக இருக்கிறது. அதற்காக ரஜினி ரசிகர்களின் விரல்களுக்கும் விசிலுக்கும் வாய்ப்பே இல்லையா என யோசிக்க வேண்டாம். எந்திரன் உருவத்தில் வரும் ரஜினி, ரஜினிக்கே உரிய அசாதாரணமான ஸ்டைலில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார். 

உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர் டாக்டர்.வசீகரன் (ரஜினிகாந்த்). இவர் தன்னை போலவே ஒரு ரோபோவை (சிட்டி ரோபோ) உருவாக்குகிறார். சண்டை முதல் சமையல் வரை, சிட்டிங் முதல் டான்சிங் வரை சொல்வதை எல்லாம் இந்த ரோபோ செய்யும். உலகின் அனைத்து விஷயங்களையும் இதன் மெமரியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு உணர்ச்சி இல்லை. இது உணர்வுகள் இல்லாத ஒரு மிஷின் மட்டுமே. ஒரு அடியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் இது அடித்து வீழ்த்திவிட முடியும். இதை இராணுவத்தில் சேர்த்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே இதனை உருவாக்கிய வசீகரனின் கனவு. 

இந்த கனவு நிறைவேறினால் வசீகரனுக்கு பெருமை சேர்ந்துவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் அவரின் பாஸ் போரா (டேனி டென்கோன்ஸ்பா) இதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.

யார் எதை சொன்னாலும் இந்த ரோபோ செய்துவிடும். இதற்கு உணர்வுகள் இல்லை என்பதால் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதெல்லாம் இந்த மிஷினுக்கு தெரியாது. அதனால் இது நம்மையே கொன்றுவிடும் பேராபத்து இருக்கிறது என்பதை சொல்லி வசீகரனின் பத்து வருடங்களின் உழைப்பை வீணாக்கிவிடுகிறார் போரா.  ஆனாலும் முயற்சியை கைவிடாமல் மீண்டும் தன் ரோபோ பயணத்தை துவங்குகிறார் வசீகரன்.

 

இதுதான் கோபம், இதுதான் சந்தோஷம் என ஒவ்வொரு உணர்வையும் சிட்டி ரோபோவின் மெமரியில் பதிவு செய்கிறார் வசீகரன். இப்போது காதல், கஷ்டம், இஷ்டம் என எல்லா விஷயங்களையும் சிட்டியால் உணர முடியும். ஆனால்...  இதுவே வசீகரனுக்கு பெரிய ஆப்பு வைத்து விடுகிறது. 

வசீகரனின் காதலியான சனாவிற்கு (ஐஸ்வர்யா ராய்) சிட்டி ரோபோ மீது அவ்வளவு இஷ்டம். சிட்டி மேல் உள்ள பிரியத்தினால் அதற்கு எப்போதும் போல முத்தம் வைக்கிறார் சனா. முத்தம் வைத்ததும் சிட்டியின் உணர்வுகள் வெடிக்கிறது. சனாவின் அழகில் மயங்கிவிடும் சிட்டி ரோபோ, அவரை காதலிப்பதாக ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்புகிறார். தன்னை உருவாக்கிய வசீகரனுக்கு வில்லனாய் மாற்றம் பெறுகிறது சிட்டி ரோபோ!

இனி தான் அதிரடி ஆட்டம்... 

அப்படி காதலித்தாலும் உன்னை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும் என சிட்டிக்கு சனா புரியவைத்தாலும், செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே... என் மெமரியை உன்னில் பொருத்திவிட்டால், மனித உயிருக்கும் மிஷினுக்கும் பிறந்த உலகின் முதல் குழந்தையாக அது இருக்கும் என விளக்குகிறது சிட்டி ரோபோ!!

 

இந்தச் சமயம் பார்த்து சிட்டி ரோபோவை தன் வசம் கொண்டுவந்து உலகத்தை அழிக்க கூடிய அத்தனை சக்தியையும் அதில் பொருத்தி விடுகிறார் வசீகரனின் எதிரி போரா. சிட்டி ரோபோ செய்யும் அத்தனை அழிவுகளின் பழியும் வசீகரன் மேல் வந்துவிடும் என்பதே இந்த சூழ்ச்சிக்கு காரணம். ஆனால், சிட்டி ரோபோவின் தீய சக்தியால் போராவிற்கே அழிவு வருகிறது.

தான் காதலிக்கும் சனாவை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் சிட்டி தன்னை போலவே இன்னொரு ரோபோவை உருவாக்குகிறது. இப்படியே ஒன்று இரண்டாக இரண்டு நான்காக, சிட்டி சொல் பேச்சை கேட்கும் பல நூற்றுக்கணக்கான ரோபோக்கள் உருவாகி விடுகிறது. 

பல பேரை வீழ்த்திய பிறகு திருமண மேடையில் இருந்து சனாவை அதிரடியாக தன்னோடு இழுத்து வருகிறான் சிட்டி. பல கொலைகள், கோடிக்கணக்கான பொருட்சேதம் என சிட்டியின் அட்டகாசத்தால் நகரமே சின்னாபின்னம் ஆகிவிடுகிறது. 

எப்படியோ ஒரு வழியாக சிட்டியின் மெமரியில் இருக்கும் தீய சக்தியை எடுத்து சனாவையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார் வசீகரன். முடிவாக இந்த ரோபோ இப்போது உள்ள சுழலில் நமக்கு தேவை இல்லை என தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். தன் பத்து வருடங்களின் உழைப்பா சிட்டி ரோபோவை வசீகரன் அழித்துவிட்டாரா?  வாழவிட்டாரா? என்பது சஸ்பென்ஸ்!

கடைசி 40 நிமிடங்கள் பல இடங்களில் காது கிழிய விசில் சத்தங்களை அள்ளிக்கொள்கிறார் ரஜினி. ரஜினிக்கே உரிய வில்லத் தனத்தோடு 'மெஹே...' என ஆடு மாதிரி கத்தினதும் தியேட்டரே அதிருது. 

'அரிமா அரிமா...'  பாடலில் வரும் ரஜினி 'மாஸ்'. ஆனால் இந்த ரஜினிக்காக படத்தின் கடைசி பாடல் வரை ரசிகர்கள் காக்க வேண்டியிருக்கிறது. பரதம், வெஸ்டர்ன், கதக், கராத்தே, ஜிம்னாஸ்டிக் என ரோபோ 'சூப்பர் ஸ்டார்' செம செம கலக்கல் ஆட்டம். 

பல ரஜினிகள் சேர்ந்து ஒரு பெரிய 'ஜெயன்ட்' மாதிரி உருவாவனதும் 'எப்பா ஆஆ...'  இது தான் ஷங்கர்! என கைதட்ட வைக்கிறார் இயக்குனர்.  
   
ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் சனா கேரக்டரை நம்ம தமன்னாவோ,  திரிஷாவோ செய்திருக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணை பார்த்ததும் மிஷினுக்கே காதல் வருகிறது என்றால், அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருக்க வேண்டும்! அதை ஐஸ் ரொம்ப அழகா செய்திருக்கிறார். 

சந்தானம், கருணாஸ் என இரண்டு காமெடியன்களின் காமெடியை விட, ரோபோ ரஜினியின் காமெடி தூள். டி.வி.யை போடு என சொன்னதும் டி.வி.யை கிழே போட்டு 'டமார்...' என உடைப்பதில் தொடங்கி சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் காமெடிகள் பல.

சில இடங்களில் சுஜாதா தனியாக தெரிகிறார். ரோபோவிடம் ஒரு கேள்வி, கடவுள் இருக்கிறாரா? அதற்கு ரோபோ கேட்கிறது, கடவுள் என்பவர் யார்? கடவுள் என்பவர் நம்மை படைத்தவர். மீண்டும் ரோபோ சொல்கிறது, என்னை படைத்தவர் வசீகரன், வசீகரன் இருக்கிறார். அப்படிஎன்றால் கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம். 

இன்னொரு காட்சி...  ரோபோ பேசுகிறது, எனக்குள் இருக்கும் உணர்வுகளை சுலபமாக நீக்கிவிட்டீர்கள். ஆனால், உங்களுக்குள் கோபம், பொறாமை, பொய், கர்வம் என ஏகப்பட்ட உணர்வுகள் இருக்கிறது, அதை உங்களால் அவ்வளவு சுலபமாக நீக்கமுடியாது என்பதே பரிதாபம்! என்று ரோபோ சொல்வது சூப்பர் வசனம். 

ரகுமான் இருக்கும் போது இசைக்கு என்ன பஞ்சம்! ரோபோடிக் இசையை இளம் இசையமைப்பாளர்களில் அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன். 

முதல் பாதியின் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்...

இந்த அசாத்தியமான உழைப்பை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய ஷங்கருக்கு ஒரு சல்யூட்!
 
நன்றி....... நக்கீரன்

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டதன் பலன் எந்திரன் பிரமாண்டம்...

 

      வியக்கவைக்கும் பிரமாண்டம் , அதிரவைக்கும் இசை, தூள் பறக்கும் நடிப்பு என அசத்த வருகிறது எந்திரன். இப்படி ஒரு பிரமிப்பான படத்தை எடுக்க எப்படி எல்லாம் மெனக்கெட்டிருக்க வேண்டும்.  சும்மா வந்ததா சுதந்திரம்...? என்பதுபோல் சும்மா வந்ததா எந்திரன்... என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட கூறலாம் எந்திரன் படக்குழு. அந்த அளவிற்கு மொத்த உழைப்பை தந்து, தூக்கத்தை இழந்து, உணவையும்கூட மறந்து எந்திரன் கனவை நினைவாக்கி உள்ளனர். 

எரிமலை கக்கும் மலை நடுவில்... ஹாலிவுட் படங்களுக்கே அனுமதி மறுக்கப்படும் ஆபத்தான மலைச்சரிவில்... மூச்சுகூட சுகமாய் விடமுடியாத அளவிற்கு மணலை வாரியடிக்கும் சூறாவளி வீசும் மணற்பரப்பில்... இப்படி மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு. இவ்வாறன பல கஷ்டங்களையும் எந்திரனுக்காக படக்குழுவினர் ஒவ்வொருவரும் இஷ்டப்பட்டு செய்தோம் என்கிறார் இயக்குனர் ஷங்கர். 

இது பற்றி இதோ அவரே...

“முதன் முதல் படப்பிடிப்பே ‘கிளிமாஞ்சாரோ’ பாடலுக்குதான். தொடக்கமே எரிமலை சூழ்ந்த, பெரு நாட்டின் மச்சுபிச்சு மலைத்தொடர் பகுதியில். இந்தப் பகுதியில் இதுவரை எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை. காரணம் அவ்வளவு ஆபத்தான இடம் அது. எந்த நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பது போன்ற அமைப்புதான் அந்தப் பகுதி. அந்த ஆபத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் பாடலை எடுத்திருக்கோம். 

கிளிமாஞ்சாரோ பாடலுக்குதான் இப்படின்னா, ‘காதல் அணுக்கள்’ பாடலுக்கான அனுபவம் அதைவிட விநோதமானது. 

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பா, ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம் என திட்டம் போட்டிருந்தேன். அதுவும் போக, யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும் என்பதில் உறுதியா இருந்தேன்.

அப்படி அமைஞ்சதுதான் பிரேசில் நாட்டில் உள்ள லாங்காய் எனும் ஒரு இடம். பெரிய பாலைவனத்தின் நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்?. அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்தில் வேற எங்குமே கிடையாது. 

ன்

இந்த இடத்திற்கு முதலில் கிளிமாஞ்சாரோ பாட்டுக்காகத்தான் போனோம். ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு பிறகுதான் தெரிஞ்சது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலின் ஒரு பகுதியைதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது என்று. அதனால் கிளம்பி வந்துட்டோம். பிறகு ‘காதல் அணுக்கள்‘ பாட்டுக்கு லொக்கேஷன் தேடுனப்ப அங்க எடுத்தா என்னான்னு தோணுச்சு. உடனே அங்கு புறப்பட்டோம்.


 லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஹோட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்பில் பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணீருக்குள் ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். 

ஏன்னா அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுவிட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். 

இது போதாதுன்னு, அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு.‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். 


ரஜினி சாரோட பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தப்ப அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேர்ந்து அவரை இன்னும் அழகா காட்டும்.

 எந்திரன் பாடல்களிலேயே ‘காதல் அணுக்கள்’ பாடல்தான் எனக்கு மிகவும் பிடிச்ச பாடல்” இப்படி இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டது பற்றி ஷங்கர் விளக்கினார்.  

படப்பிடிப்புக்குதான் படாதபாடு பட்டார்கள் என்றால் இசைக்கும்கூட அதிக சிரமப்பட்டுள்ளனர்...

ஏ.ஆர் ரஹ்மானின் கடின உழைப்பு பற்றி யாவரும் அறிந்ததுதான். தூங்காமல் இரவில்தான் மெட்டு போடுவார். அவர் ஒரு‘ராக்கோழி’என்று அவரை அறிந்தவர்கள் கூறுவது வழக்கம். அவரது கடின உழைப்புக்குதான் இரட்டை ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன . 

அப்படிப்பட்ட இசைப்புயல் எந்திரன் பிரமாண்டத்தில் சிறப்பான தனது பங்களிப்பு பற்றி கூறியது...
  
“படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும் என ஷங்கர் எதிர்பார்த்தார். படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறதனால், அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தால்தான் சிறப்பா இருக்கும். 

அதுக்காக, லண்டன் சென்னை மும்பை என மூணு இடத்துல பின்னணி இசை சேர்க்குற பணியை செய்தோம். லண்டனில் மட்டும் 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணியிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன் என்னும் ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு ஒர்க் பண்ணியிருக்காங்க. 


‘சிவாஜி‘ படம் பண்ணும்போது செக்கஸ்லோவியாவில் உள்ள பிராக்கில் ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனால், எந்திரனுக்கு, இன்னும் ஒருபடி மேல போய், ‘பிராஸ்’என்னும் இசைக்குழுவை பயன்படுத்தியிருக்கோம். லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்க எல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க. மேலும், நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். 

இந்த வேலைகள் நடந்த பொழுது ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்.”  இப்படி கஷ்டங்களுக்கு இசைந்துதான் இசையமைத்தோம் என்றார் ரஹ்மான்.

சும்மா வரவில்லை எந்திரன்... இத்தனை சிரமங்களை அடுக்கி வைத்து கட்டப்பட்டதுதான், வியக்கும் எந்திரன் கோட்டை.

இவ்வளவு இன்னல்களையும் இனிதாக்கும் எந்திரனின் வெற்றிச்சாதனை... என்ற ஒரோ சந்தோஷத்துடன் இருக்கிறது எந்திரன் படக்குழு. 
 
நன்றி.. நக்கீரன்

உலகமெங்கும் எந்திரன் திரைவிழா...


 

     ஷங்கரின் 10 ஆண்டுகால கனவு, 3 ஆண்டுகால உழைப்பு, அத்துடன் உலக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று எல்லாவற்றிக்கும் பலனாக இன்றுமுதல் எந்திரன் திரைவிழா கொண்டாடுகிறது.  

எந்திரன் பல ஆச்சரியங்களை நிகழ்த்தி உள்ளது.  சில ஆச்சரியங்கள் தானாகவே எந்திரனுக்கு அமைந்துள்ளன. எந்திரன் திரையிடப்பட்டுள்ள இன்றைய தேதியான 01.10.10 என்பதே எந்திரனோடு தொடர்பானதே.  011010 என்னும் குறியீட்டு மொழியில்தான் கணிப்பொறித் தகவல்கள் பதிவாகும். அந்த வகையில் எந்திரனோடு சம்பந்தப்பட்டுள்ளது இந்த ரிலீஸ்தேதி.

எந்திரன் படக்குழுவினர் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி மகுடமாக இன்று வெளியாகியுள்ளது எந்திரன். உலக அளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், கோவை என தமிழகமெங்கும் திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கொண்டாட்டம், தீபாவளிக் கொண்டாட்டமாக எந்திரனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.  

திரையரங்குகள் எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பாலாபிஷேகம் மழையாகப் பொழிகிறது. தவுசன்வாலா வெடிசத்தம் சும்மா வானையே அதிரவைக்கிறது. இந்த அமர்க்களம் இங்குமட்டுமல்ல...  சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா, சீனா, ஜப்பான், துபாய் என உலகமெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடிவருகிறார்கள்.

இப்படி ரசிகர்கள் கொண்டாடிவரும் எந்திரனை விளையாட்டு வீரர்களும் கொண்டாடவிருக்கிறார்கள்.  காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை திருப்தி படுத்தவிருக்கிறது எந்திரன். 

காமன் வெல்த் விளையாட்டு கிராமத்தில், போட்டிக்காக வந்திருக்கும் வீரர், வீராங்கனைகள் கண்டு மகிழ ஒரு திரையரங்கம் உருவாகப்பட்டுள்ளது.   இதில் ரோபோ (எந்திரன் இந்திப் பதிப்பு) ,  அஞ்சானா அஞ்சானி உள்ளிட்ட பல புதுப்படங்களை திரையிடத் திட்டமிட்டுள்ளனர். 

இப்படி இத்தனை சிறப்பு மிக்க எந்திரனுக்கே ஹைலைட்டானது கடைசி 40 நிமிட விறுவிறுப்பான காட்சிகள்தான்.  இந்த சந்தோஷமான நேரத்தில் அந்த அனிமேட்ரானிக்ஸ் காட்சிகள் உருவான விதத்தை ஷங்கர் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா...

இதோ அவரின் எந்திர வார்த்தைகள்...


“எந்திரனின் ஒவ்வொரு காட்சியையும் எந்த படத்தின் சாயலும் வந்திடக் கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு திரைக்கதை அமைத்திருக்கோம். அதனால் படத்தில் எல்லாமே பிரெஷ்ஷா இருக்கும். 

எந்திரனின் அனிமேட்ரானிக்ஸுகாக ‘ஸ்டான்வின்ஸ்டன்’ என்கிற ஹாலிவுட் ஸ்டூடியோவுக்கு போனோம். நாங்க ஏற்கனவே படத்தை ரஃபா ரெடி பண்ணி வச்சிருந்தோம். அதை அங்க திரையிட்டு, இதுதான் கதை, இதுக்கு ரோபோ பண்ணணும் என சொன்னதுமே, அங்க இருந்த எல்லாருமே “வாவ்... எக்ஸலன்ட். ரொம்ப புது ஐடியாவா இருக்கு” என்று எங்கள் கையை பிடிச்சு குலுக்கினாங்க.  

ஒரு ரோபோ பண்ண வேண்டும் என்றால் இங்கேயே அனிமேஷனில் பண்ணலாம். ஆனா, அது அனிமேஷன்னு ரசிகனுக்கு தெரிந்து விடும். 

அதனால, அனிமேட்ரானிக்ஸில் ரஜினி மாதிரியே மெட்டலில் ஒரு உருவத்தை உருவாக்கி, அதை இயங்க வச்சோம். இந்த இயக்கத்துக்குதான் அனிமேட்ரானிக்ஸ் தேவைப்பட்டது. ரசிகனின் நம்பகத் தன்மைக்காக, அதிக செலவு பண்ணி அதை பண்ணியிருக்கோம். 

அதுமட்டுமில்லாமல் வேற சில டெக்னிக்குகளையும் இதற்காக பயன்படுத்தியிருக்கோம். ரோபோ ரஜினி பண்ற விஷயங்கள் எல்லாமே அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். 

இந்தப் படத்துக்காக ரஜினியின் உழைப்பு அபாரமானது. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப ஆர்வமாக கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்.

எவ்வளவு நேரமானாலும் ஸ்பாட்டுலயே இருப்பார். அவரோட எளிமையை பத்திதான் எல்லாரும் பேசுவாங்க. ஆனா, அவரோட உழைப்பை எந்திரனில் பார்த்து அசந்திருக்கேன். 


இதில் வரும் ஒரு ரயில் சண்டை காட்சியில் ரஜினி அதிக ரிஸ்க் எடுத்து சண்டை போட்டிருக்கார். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு இந்தச் சண்டைக் காட்சியில் பலமுறை விபத்து ஏற்பட்டது. ஒரு கட்டத்துல அவர் பிழைப்பதே கஷ்டங்கற நிலைமை. ஆனால், மீண்டு வந்து அடுத்தடுத்த சண்டைக்காட்சிகளை அமைத்தார்.  

இதில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி த்ரில்லிங்கா, இப்படியெல்லாம் பண்ண முடியுமா என்கிற மாதிரியான சண்டைக்காட்சி அது. அதற்காக பட்டபாடு கொஞ்சமல்ல. 

உலகத்திலேயே முதன்முறையா வித்தியாசமான அனிமேஷன் பண்ணியிருக்கோம். ‘குங்குஃபூ ஹஸில்’, ‘கிடாரோ’ உட்பட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் பண்ணியிருக்கிற பிராங்கி சங்க்தான் எந்திரனுக்கும் பண்ணியிருக்கார். 

அவராலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த அனிமேஷனை முடிக்க முடியவில்லை.  ‘இது எனக்கே சவாலான விஷயமா இருக்கு. இதுக்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுது. பக்காவா பண்ணுவோம், வெயிட் பண்ணுங்க’ என்றார் பிராங்கி. அப்படி கஷ்டப்பட்டு, கவனமாக உருவாக்கிய கிளைமாக்ஸ் நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார் எந்திரனுக்கு உயிரூட்டிய ஷங்கர்.
அவர் சொன்னதைப் போலவே நம்மை பிரமிக்க வைக்கிறது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி... 
நன்றி ......நக்கீரன்

எந்திரன் - அட்டகாசம்

ந்திய திரையுலகம் இதுவரை காணாத வெற்றியை எந்திரன் பெற்றுள்ளது. துபாயில் இன்று காலை வெளியான எந்திரன் முதல் காட்சி (7.30 மணிக்கு) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் “ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார், இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம்தான்” என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

“சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை… எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்… குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்”… இதுதான் எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் FIR.
(முதல் தகவல் அறிக்கை).

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர். படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் கூறினார்.


அவர் கூறியதாவது :
“சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி – ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள். எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை. ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி – ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது. படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்…என்றார் அவர்.


அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ.3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார். ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.


சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

நன்றி......நக்கீரன்